Vedhamae Enna Song Tamil Christian …

Lyrics

வேதமே என்ன சொல்லுவேன் நின் மாட்சியை சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப் பாதமுறும் நெறி யோது மொரே சத்ய கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம் காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம் புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம் புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம் சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார் தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார் அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார் அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார் கனபல மருளுவாய் தினந்தினங் காலை களைப்பினைப் போக்குவாய் களைப்புறு மாலை தினமென திதயமே திருத்தலுன் வேலை செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும் அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும் தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும் தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும் பொன் அபரஞ்சியிலும் உன் விலை பெரிதே பூவுலகினிலுனக் குவமைக ளரிதே நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1496
Song ID
vedhamae-enna-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open