Vepamigu Naatkalil Achamillaiye வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

Lyrics

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2 என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையே உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2 பாக்கியவான் பாக்கியவான் – 2 – நான் என்றென்றும் பாக்கியவான் 1. கிருபை சூழ்ந்து கொள்ளும் பேரன்பு பின் தொடரும் – உம் இதயம் அகமகிழும் – என் இன்னிசை தினம் பாடும் – 2 2. இக்கட்டு துன்ப வேளையில் காக்கும் தகப்பன் நீரே – 2 பூரண சமாதானம் – உம் தினம் தினம் இதயத்திலே – 2 3. குருடன் பர்த்திமேயு கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2 இயேசுவே இரங்கும் என்றான் பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2 4. நம்பி வந்த குஷ்டரோகியை நலமாக்கி அனுப்பினீரே – 2 யவீரு உம்மை நம்பியதால் மகள் அன்று சுகம் பெற்றாள் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6763
Song ID
veppamigu-natkalile-acchamillaiye
Views
0
Downloads
0