Vin Magimai Kanmun Kanden விண் மகிமை கண் முன் கண்டேன்

விண் மகிமை கண் முன் கண்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

விண் மகிமை கண் முன் கண்டேன் விண் மன்னன் இயேசு என்னை அழைக்கின்றார் மண்ணுலகில் இன்பங்கள் மாயையல்லோவீணானதே மாறிடுதேவிண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே மரண யோர்தான் புரண்டு வந்தால் மாலுமி ஏசுவின் கப்பல் ஏறி அக்கரை யோரம் நான் சென்றிடுவேன் அங்கே வரவேற்பு காத்திருக்கும் – விண் பரதீசிலே பல காட்சிகள் பார்த்துப் பரவசம் பொங்கிடுமே கண்ணீர் கவலையும் அங்கில்லையே கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் – விண் ஜீவ ஜல நதி ஓடிடும் ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும் கர்த்தரின் கைகோர்த்து நடந்திட காத்துக் தவிக்கின்றதென் உள்ளமே – விண் புதிய கனி புசித்திடுவேன் பூக்கள் நடுவே உலாவிடுவேன் தூதர்கள் பக்தர்களோடு வாழும் தூய பேரின்பத்தை நாடுகின்றேன் – விண் நல்ல சுகம் ஆரோக்யமும் நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே தேவ சமூக இளைப்பாறுதல் தேவை அதை நாடிக் கண்டடைவேன் எத்தனையோ பிரதி பலன்கள் உத்தம ஊழியர் பெற்றிடவே ஒட்டம் ஜெயத்தோடு முடிந்திடும் ஒன்றே என தாவல் ஏசுபோதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3867
Song ID
vin-magimai-kanmun-kanden-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open