Vinnaga Nilavo விண்ணக நிலவோ தேவனின் மகவோ
விண்ணக நிலவோ தேவனின் மகவோ
Lyrics
விண்ணக நிலவோ தேவனின் மகவோ
இப்பூவில் உதித்ததுவோ
பனிவிழும் இரவில் மழலையின் குரலோ
எங்கெங்கும் ஒலித்ததுவோ
ஒளிதரும் நிலவாய் பூவுலகில் வந்தாரே
பாவ இருள் போக்க வையம் வந்தாரே
மலர்ந்திடும் மலராய் பூவுலகில் வந்தாரே
மன இருள் போக்க மண்ணில் வந்தாரே
தூதரும் பாடிட பாலனாக வந்தாரே
ஆயர் மகிழ்ந்திட தேவன் வந்தாரே
மழலை உருவிலே மன்னவரும் வந்தாரே
மனதின் இருள் நீக்கவே
அன்பின் உருவாக வந்ததும் ஏனோ
பாரில் எனக்காக பிறந்ததும் ஏனோ
பாதை காட்டி என்னை நடத்திடத் தானோ
பாவி எனையும் நீர் மீட்டிடத் தானோ
உயிரின் உறவாய்
உலகின் ஒளியாய்
என் வாழ்வின் விடி வெள்ளியாய்
அகிலம் அழகாகவே பிறந்தீரே
அன்பின் உருவாகவே பிறந்தீரே
ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே
ஆயுள் வரை எம்மைக் காப்பவர் நீரே
அல்பா ஓமேகாவும் ஆனவர் நீரே
அன்னை போல் என்னை அணைப்பவர் நீரே
உயிரின் உறவாய் உலகின் ஒளியாய்
என் வாழ்வின் விடிவெள்ளியாய்
அகிலம் அழகாகவே பிறந்தீரே
அன்பின் உருவாகவே பிறந்தீரே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5177
- Song ID
- vinnaga-nilavo-lyrics-song-chords-ppt
- Views
- 18
- Downloads
- 1