Virundhai Seyrumeyn 154 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1. விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்; ஆகாரம் பாருமேன், போஷிப்பார்; தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்; பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்; நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று; ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும் சேராவிடில், தோல்வியே நேரிடும் போராட்டத்தில்; இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர், இயேசுவே ஆண்டவர்; வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய்; சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்? வாடாத கிரீடமும் ஆனந்தக் களிப்பும் பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா. 5. சேருவேன் இயேசுவே, ஏற்றுக் கொள்வீர்; பாவமும் அறவே சுத்தம் செய்வீர்; அப்பாலே மோட்சத்தில் ஆனந்தக் கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5468
Song ID
virundhai-seyrumeyn
Views
0
Downloads
0