Visuvaasa Paathaiyil விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்
விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்
Lyrics
விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்
நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து ஓடிடுவேன்
பாடுகள் என்ன செய்யும்
துன்பங்களென்ன செய்யும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
அன்பை விட்டு பிரிப்பதில்லை
1. வார்த்தை என்னும் மாத்திரையை
தினமும் சாப்பிடுவேன்
வாழ்நாளெல்லாம் சுகமாகவே
வாழ்ந்து பெலனடைவேன்
உம் தழும்புகளாலே சுகமானேன்
உம் வார்த்தையினாலே பெலனானேன்
2.கர்த்தருக்குள் எப்பொழுதும்
சந்தோஷமாயிருப்பேன்
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து
கனிகள் கொடுத்திடுவேன்
நல்ல நிலத்தின் விதை போல நூறு
மடங்கு பெலன் கொடுப்பேன்
3. விசுவாச கப்பலிலே பயணம் செய்கின்றேன்
போர்ச் சேவகனாய் பணி செய்து
ஓட்டத்தை முடித்திடுவேன்
நீதியின் கிரீடம் எனக்கு உண்டு
நிரந்தர வாழ்வு அங்கு உண்டு
Details
- Numeric ID
- 7581
- Song ID
- visuvaasa-paathaiyil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open