Yakobennum Siru Poochiye யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ
யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ
Lyrics
யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்துவிடாதே
உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே
அழைத்தவர் கைவிடுவாரோ இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ இல்லை
பேர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமைப்படுத்திடுவார்
பெலவீனன் ஆவதில்லை இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை இல்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை
வியாதிகள் வருவதில்லை இல்லை
வாதைகள் தொடர்வதில்லை இல்லை
ஆண்டுகள் முடிவதில்லை
அவர் கிருபை விலகுவதில்லை
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1826
- Song ID
- yacob-ennum
- Views
- 22
- Downloads
- 1