Yagova Nisi Yagova Nisi

யேகோவா நிசி யேகோவா நிசி
Unknown
PPT
Lyrics

Lyrics

யெகோவா நிசி (4) யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2) 1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா 2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் கர்த்தர் நல்ல யுத்த வீரரே – யெகோவா 3. எதிரி வெள்ளம் போல ஏறி வருகின்றான் இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார் கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா? கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா? கர்த்தர் நாமம் வல்ல நாமம் – யெகோவா 4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே ஆவிகளின் சேனைகளை வெல்வோமே கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ – யெகோவா 5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபலமோ தேவையா? பரம தேவ ஆவி நம்மில் இல்லையா? ஜீவ தேவ சேனை அல்லவோ? – யெகோவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4797
Song ID
yagova-nisi-yagova-nisi-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open