Yarilum Mahan Yesu En Nesare …

யாரிலும் மகான் இயேசு என் நேசரே
Unknown
Lyrics

Lyrics

யாரிலும் மகான் இயேசு- என் நேசரே நல்லவர் வல்லவர் என்றுமே! 1. அவருக்கு சமமாய் ஓராளு மில்லை, அவரைப்போல வல்லவர் யாருமில்லை, அவரண்டை சேர்ந்தோர்கள் யாவரும் -யாவரும் ஒரு நாளும் அலையாமல் இன்பமாய் -இன்பமாய் திருநாமம் வாழ்த்தி புகழுவர் -யாரிலும் 2. நின்றார் அவர் நம் நிலையில், அன்று வென்றார் பிசாசை சிலுவையிலே! ஈந்தாரே நித்திய ஜீவனை -ஜீவனை. தந்தார் இதயத்தில் ஆனந்தம் -ஆனந்தம் அல்லேலூயா கீதம்பாடுவோம் - யாரிலும் 3. தன்னுயிர் தந்தவராலேயன்றி, இரட்சிப்பில்லை வேறொரு வராலும்! வானத்தின் கீழெங்கும், எங்குமே -எங்குமே வேறொரு நாமமும் இல்லையே - இல்லையே! ஒப்பற்ற நேசரைப் போற்று வோம் - யாரிலும் 4. உலகை முழுவதும் அடக்கி ஆள வருவார் என் நேச இராஜாதி இராஜா! பசி தாகம் இல்லாத நாட்டில் நாம்- நாட்டில் நாம் பரனோடு சேர்ந்தென்றும் வாழுவோம் -வாழுவோம்! புதுப்பாட்டை நாம் சேர்ந்து பாடுவோம்!!

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4273
Song ID
yarilum-mahan-yesu-en-nesare-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0