Yesennum Namam இயேசென்னும் நாமம்

இயேசென்னும் நாமம்
Unknown
Lyrics

Lyrics

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் நானிலம் தனில் என் அரணே – ஆ ருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும் உரைக்கவும் பெயரும் 1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும் சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆ பந்தனை ஜெயித்து, வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் 2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும் வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆ வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே வேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே 3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும் நோய்பிணி யாவுமே தொலையும் – ஆ அதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும் 4.பயங்கர சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும் மயங்கிடும் நஞ்சை ஜெயிக்குமே – ஆ தயங்கி நிற்பவரை தாங்கிடும் பெலனே தயங்கி வந்தவரை ஆற்றிடும் பெயரே 5.ஆ! என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில் ஆனந்தமே அதன் நினைவில் – ஆ தேனிலும் இனிமைபேதைக்கு மகிமை தேனிலும் இனிமை, ஏழைக்கும் உரிமை 6.வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் தொனித்திட இயேசுவின் நாமம் – ஆ மடங்குமே முழங்கால், அடங்குமே துடுக்கும் மடங்கு மெப்பெயரும் நடுங்குமே அவர்க்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
45
Song ID
yesennum-namam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1