Lyrics
இயேசு என்றதுமே எனக்கு ஒரு
இன்பம் பிறக்குதம்மா
காசினியிள்ளவர் போல் எவரையும்
கண்டதில்லையம்மா
1. பேச தொடங்கினாலும்
பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
பாவியில் இல்லையம்மா
2. குஷ்ட ரோகிகளை கைகளால்
கூசாமல் தொட்டாரம்மா
கஷ்டப்படுவோரைக் கண்டதும்
கண்ணீர் வடித்தாரம்மா
3. சிலுவை மீதினிலே இரத்தத்தை
சிந்தி மடிந்தாரம்மா
உலகை மீட்டிடவே இயேசு வந்து
உவந்து மாண்டாரம்மா
Details
- Numeric ID
- 8140
- Song ID
- yesu-endrathumae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open