Yesu Maharajan Piranthar இயேசு மஹாராஜன் பிறந்தார்
இயேசு மஹாராஜன் பிறந்தார்
Lyrics
இயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயா
உன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும்
அழகிய இரவு இது – நிர்மல இரவு
இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2
ஜீவ ஒளியாய் பாரில் இயேசு
உதித்த மகத்துவ இரவு
நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு
நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு
புதியொரு உலகம் பாரில் தோன்ற
இயேசு பிறந்த இரவு
மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு
ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு
இடையர்கள் பாடி துதித்த இரவு
மாதேவ மகிமையின் இரவு
Details
- Numeric ID
- 3625
- Song ID
- yesu-maharajan-piranthar-lyrics-song-chords-ppt
- Views
- 11
- Downloads
- 3
- Source
- Open