Yesu Naamam Ulaginil இயேசு நாமமல்லாம் உலகினில்

இயேசு நாமமல்லாம் உலகினில்

Lyrics

யேசு நாமமல்லாம் உலகினில் வேறு நாமம் இல்லை, கிறிஸ்து தேசுலாவிய கேரூபீம்பணி திவ்ய வானவர் முனிவர் கண்மணி, மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி, மதிக்கும் சத்திய வேத சிரோமணி 1. வானமும் புவியும் கதி ரோன் மதி உடுவும் கானல் வரை கடலும் நர ரான எவ்வுயிரும் தானே படைத்தருள் ஆதி காரணன் சர்வ ஜீவ தயாபரா பூரணன், ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன், இலங்கும் வேத சங்கீத பாராயணன். 2. காவிலாத மேவை செய் தீவினையதனால் பூவின் மாந்தர் படும் துயர் தேவ கோபமற, பாவிகளைப் பரனோடுற வாக்கப், பரம எருசலேம் நகர் சேர்க்க, மேவுமலகை அரணைத் தூளாக்க, மேதினியில் சமாதானம் உண்டாக்க. 3. பண்டு வேதியர்கள் கைக் கொண்ட மாமறையில் விண்ட நாமமல்லாமல் உயர் அண்ட மீதினிலும், மண்டலத்திலும், ஆழி கீழிலும் மாருதம் செலும் அட்ட திக்கிலும், தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும், துஷ்டர் வர விரும்பாத இடத்திலும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5239
Song ID
yesu-naamam-ulaginil-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1