Yesu Nesikkirar Yesu Nesikkirar இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

Lyrics

இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ; இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மாதவமோ! 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், மாசில்லாத பரன் சுதன்றன் முழு மனதால் நேசிக்கிறார் — இயேசு 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் நரராமீனரை நேசிக்கிறாரென நவிலல் ஆச்சரியம் — இயேசு 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும், நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல் நித்தம் ஆச்சரியம் — இயேசு 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்; அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ ஆவலாய்ப் பரப்பேன் — இயேசு 5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் , ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5268
Song ID
yesu-nesikkirar-yesu-nesikkirar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1