Yesu Rajane Nesikkiren
இயேசு ராஜனே நேசிக்கிறேன்
Lyrics
இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் – 4 – உயிருள்ள
1. அதிசயமானவரே,
ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
2. இம்மானுவேல் நீர்தானே,
எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
3. திராட்சைச் செடி நீரே,
தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
4. யோனாவிலும் பெரியவரே,
சாலமோனிலும் பெரியவரே
ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
கிருபாதார பலி நீரே
பரிந்து பேசும் ஆசாரியரே
உம்மைத்தான் நேசிக்கிறேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2034
- Song ID
- yesu-rajane-nesikkiren
- Views
- 5
- Downloads
- 0