Yesuvae Nee Thaalnthoraana பாமாலை: 368 இயேசுவே நீர் தாழ்ந்தோரான

பாமாலை: 368 இயேசுவே நீர் தாழ்ந்தோரான

Lyrics

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான நாட்களில் கும்போடே நீர், என்னால் நோயைத் தீர்ப்பதான சத்து பாய்ந்தது என்றீர். இப்போதுன்னதத்தில் ஆளும் இராஜாவான நீர், இந்நாளும் சக்தியை என்பேரிலும் பாயப்பண்ணியருளும். 2.உமக்கதிகாரம் யாவும் தரப்பட்டிருக்குதே; தேவரீரை எந்த நாவும் கர்த்தர் என்கவேண்டுமே, யாவும் உமக்குப் பணியும் பெருமை எல்லாம் அழியும், உம்மால் கடைசியிலே சாவும் வெல்லப்படுமே. 3.ஆகையாலே தேவையான மீட்பெப்போதும் உம்மாலாம்; இதற்கு நீர் செய்ததான அற்புதங்கள் சாட்சியாம்; ஏனென்றால் அவரவர்க்கு அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே தயவாக வந்தீரே. 4.ஆ, இவ்வேழைக்கும் இரங்கும், தெய்வ பரிகாரியே, என்னைப் பாரும், என்னில் எங்கும் நோவும் ரோகமும் உண்டே, பாவமும் பொல்லா வினையும் நீங்க என்மேல் கையை வையும்; சொஸ்தமாகென்றெனக்கும் நீர் அன்பாகச் சொல்லவும். 5.உம்முடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொடுகிறேன்; நீர் ரட்சிக்கிற பலத்தின் சத்துவத்தை நம்புவேன்; நீர் உரைத்ததைப் பிடிப்பேன், உமக்கென்னை ஒப்புவிப்பேன்; மீட்போம் என்று சொன்னீரே, மீட்டுக்கொள்ளும், இயேசுவே 6.ஆமேன், என் ஜெபத்தைக் கேட்பீர், என்னை சுத்தம் பண்ணுவீர்; என்னை நோக்கி என்னைச் சேர்ப்பீர், தேற்றி அன்பைக் காண்பிப்பீர், அத்தால் நித்த நித்தமாக உமக்குப் புகழ்ச்சியாக தோத்திரஞ் செலுத்துவேன்; ஆமேன், ஆமேன் என்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5161
Song ID
yesuvae-nee-thaalnthoraana-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0