Yesuvae Thiruchabai Aalayathin Song

Lyrics

யேசுவே திருச்சபை ஆலயத்தின் என்றும் நிலைக்கும் மூலைக்கல் பேசற் கரிய மூலைக்கல் அவர் பெரும் மாளிகையைத் தாங்கும் கல் 1.ஆகாதிதென்று வீடு கட்டுவோர் அவமதித்திட்ட இந்தக் கல் வாகாய் ஆலய மூலைக் கமைந்து வடிவாய்த் தலைக்கல்லான கல் 2.ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும் அதிசயமான அன்பின் கல் ஞாலத்துப் பல ஜாதிகள் தமை நட்புற ஒன்றய்ச் சேர்க்கும் கல் 3.ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும் உன்னத விலைபெற்ற கல் எப்பொதும் பரஞ்சோதியாய் நீதி இலங்கும் சூரியனான கல் 4.காற்றுக்கும் கன மழைக்கும் அசையா கடிய மாபலமான கல் மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத் தேற்றிச் சபையைக் காக்குங் கல் 5.என்றும் கட்டுவோம் இந்த ஆலயத்தை எழிலுறவே இக் கல்லின் மேல் நன்றாய் இக்கல்லில் நம்பிக்கை வைப்போன் நாணம் அடையான் மெய்தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1806
Song ID
yesuvae-thiruchabai-aalayathin
Views
10
Downloads
2