Yesuvai Nokki Nokki இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
Lyrics
இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
கவலைகள் மறந்திடு அவர் மேல் வைத்திடு
தேவைகள் சந்திப்பார் கவலைகள் மாற்றுவார்
கரத்தால் அணைத்திடுவார் அவரை நம்பிடு
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. துன்பத்தினால் உள்ளம் உடைந்து
வாடுகின்றாயோ - அன்பர் இயேசு
உனக்கு உண்டு கவலை கொள்ளாதே
உள்ளம் மாறிடும் வேதனை நீங்கிடும்
கண்ணீர் துடைத்து ஆறுதல் தருவார்
2. வியாதியினால் சரீரத்திலே பெலவீனமோ
பரிகாரி இயேசு உண்டு மனம் தளராதே
வேதனை மாறிடும் வியாதிகள் நீங்கிடும்
மனது உருகி நிச்சயம் இரங்குவார்
3. தோல்வியாலே உள்ளம் உடைந்து
சோர்ந்து போனாயோ - ஜெயம் கொடுக்கும்
இயேசு உண்டு தளர்ந்து போகாதே
தோல்விகள் மாறிடும் சோர்வுகள் விலகிடும்
வெற்றியை தருபவர் நிச்சயம் தருவார்
Details
- Numeric ID
- 6200
- Song ID
- yesuvai-nokki-nokki-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open