Yesuvaip Pinpattum Manitharkal Yaar …

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்? எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில் 1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா நயமாக அழைக்கிறார் வா – நீ வா உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன் 2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா எல்லாவற்றையும் விற்று வா – நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன் 3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா இச்சையின் வலையில் நீ சிக்கி விடாதே வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன் 4. பின்பற்ற வருகிறேன் நான் – நானே உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே இயேசுவே இறங்கிடும் ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன் இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3113
Song ID
yesuvaip-pinpattum-manitharkal-yaar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0