Yesuve Andavar இயேசுவே ஆண்டவர் நம்முடை

இயேசுவே ஆண்டவர் நம்முடை
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே ஆண்டவர் நம்முடைய இரட்சகர் நேற்றும் இன்றும் மாறிடாதவர் அவரே என் மூச்சு மன்றாடும் யாவர்க்கும் அளவற்ற நலன்களை பொழிகின்றார் 1. வாழ்வோ சாவோ வான தூதரோ வருவனவோ நிகழ்வனவோ வலிமை மிக்கதோ உன்னதத்தில் உள்ளதோ மாயமுள்ளதோ இயேசுவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது 2. வேதனையோ நெருக்கடியோ சோதனைகளோ இன்னல்களோ இடர்களோ பிரிவுகளோ பட்டினியோ பாசங்களோ ஆடையின்மையோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது 3. அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சைசெடி கனிதராமல் போனாலும் ஒலிவமரம் பலனற்று போனாலும் என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் 4. வயல்களில் தானியம் விளையாவிட்டாலும் கிடைகளில் ஆடுகள் அழிந்து விட்டாலும் தொழுவத்தில் மாடுகள் இல்லாவிட்டாலும் என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6164
Song ID
yesuve-andavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open