Yesuve En Deivame En இயேசுவே என் தெய்வமே
இயேசுவே என் தெய்வமே
Lyrics
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் – 2
1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் – 2
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2
2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் – 2
உம் வல்லமை இழந்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2
3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் – 2
நீர் எனக்காக பலியானீர் – 2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2
4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் – 2
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே
5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் – 2
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2
Details
- Numeric ID
- 5340
- Song ID
- yesuve-en-deivame-lyrics
- Views
- 1
- Downloads
- 1