Yesuve Ummai Polaga இயேசுவே உம்மைப்போலாக

இயேசுவே உம்மைப்போலாக

Lyrics

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம் முற்றும் படைத்து விட்டேன் என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே பெலமதை தாருமையா – உந்தன் உபத்திரவம் உண்டு உலகினில் என்று உலகத்தை வென்றேனென்றீர் உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே பெலமதை தாருமையா – உந்தன் சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் அல்ல என் சீஷன் என்றீர் எந்தன் சிலுவையை நான் சுமக்க பெலமதைத் தாருமையா – உந்தன் தலைசாய்க்க தலமில்லை தரணியில் உறவில்லை நிலையில்லா பூவில் என்றீர் நானும் உம்மைப் போல தியாகம் செய்ய பெலமதைத் தாருமையா – உந்தன் சீயோன் மலையதில் சிறந்தே இறங்கிடும் தேவாட்டுக்குட்டி நீரே சீயோனில் உம்முடன் நானிருக்க உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1916
Song ID
yesuve-ummai-polaga
Views
11
Downloads
1