Lyrics
இயேசுவின் நாமமே இனிதான நாமமே
சுவைத்துப் பார்த்தால் போதுமே
தேனிலும் மதுரமே-2
1. பாவியாய் இருந்த எனக்காய்
பரம் விட்டு பாரில் வந்த
பரிசுத்த இரத்தம் சிந்தி
என்னை மீட்ட நாம்மே -2
2. துரோகியாய் தூரம் போன
என்னையும் சேர்த்துக் கொண்ட
நீதிமான் என்று அழைத்து
நிரந்தர வாழ்வழித்த
3.அக்கிரம சிந்தை கொண்டு அன்பருக்கு
அகன்று போனேன் - அகாபே
அன்பினாலே அண்டி வந்த நாமமே
4. நீசனாய் நித்தம் வாழ்ந்து
நேசரை விலகினேனே
நீதிபரராயிருந்து பரிந்து பேசும் நாமமே
Details
- Numeric ID
- 2262
- Song ID
- yesuvin-naamam-inithaana-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0