Yesuvukku Namathu Desathai யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
Lyrics
யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
பாசமாய் முயல்வோமே தாசரே
தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு
வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி
கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
எங்குமே யேசுராசா ஆளவே அவர்
சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிளெல்லாம்
மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன்
வித்தை பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு
மெத்த்ப் பேர்போன இந்திய தேசமாம் இதில்
சத்தியமாக வந்த நித்யா யேசுவின் பரி
சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற
தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க
மாயக் கோட்பாடு முற்றும் மாறவே யேசு
தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்
பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல
நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்
செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் அவர்க்
குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து
நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1805
- Song ID
- yesuvukku-namathu-desathai
- Views
- 8
- Downloads
- 0